கோவை:கோவைக்கு மீண்டும் வருகிறது சைக்கிள்! சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும்,'இ-சைக்கிள்','ரெகுலர்' சைக்கிள்களை வாடகைக்கு இயக்குவது தொடர்பான, 'டெண்டர் டாக்குமென்ட்' தயாரிப்பில், மாநகராட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த முறை சீனாவின் 'ஓபோ' சைக்கிள்களை திருடி ஏமாற்றியது போல், இந்த முறை ஏமாற்ற முடியாது.கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
அத்துடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வாகன ஓட்டிகளை தலைசுற்ற வைக்கிறது. இதனால், அதிக 'மைலேஜ்', புகை மாசுதவிர்க்கும், 'எலக்ட்ரிக்' வாகனங்கள் மீது, கவனம்திரும்பி வருகிறது. இது ஒருபுறமிருக்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ்வாலாங்குளக்கரைகளில், 'சைக்கிள்' ஓட்டுவதற்கான டிராக் தயாராகி வருகிறது.இது குறித்து விசாரித்தபோது, 'எலக்ட்ரிக் சைக்கிள்'(இ-சைக்கிள்), 'ரெகுலர்' சைக்கிள்களை வாடகைக்குஇயக்கும்,இரு விததிட்டங்களை மாநகராட்சி கொண்டு வரவுள்ளது தெரியவந்தது.
ஓடிப்போனது 'ஓபோ'
2018ம் ஆண்டு மார்ச்சில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சீனாவை சேர்ந்த 'ஓபோ' நிறுவனத்துடன் இணைந்து, மாநகராட்சி நிர்வாகம் வாடகை சைக்கிள் திட்டத்தை ஆர்.எஸ்.புரத்தில் துவங்கியது;ஆயிரக்கணக்கானோர் ஆர்வம் காட்டினர். ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் கொண்டசைக்கிளைதிருட முடியாது என்ற நம்பிக்கையில், முன்பணம் வசூலிக்காமல் கேட்டவருக்கெல்லாம் சைக்கிள் வழங்கப்பட்டது. ஆனால், பலர் சைக்கிளைஒப்படைக்காததால், அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் திட்டத்தை கைவிட்டது. தற்போது, மாநகராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறியதாவது:மாநகராட்சியின் குறிப்பிட்ட இடங்களில், சைக்கிள்களை இயக்குவது தொடர்பாக திட்டமிட்டு வருகிறோம். 'எலக்ட்ரிக் சைக்கிள்'(இ-சைக்கிள்), 'ரெகுலர்' சைக்கிள் இயக்குவது என இருவிதமான திட்டங்கள் உள்ளன. வாடகைக்கு சைக்கிள் எடுத்து, குளங்களைசுற்றிபயணிக்கும் விதத்தில் திட்டம் ஒன்று உள்ளது.
சமீபத்தில் துணை கமிஷனர், கவுன்சிலர்கள் அடங்கிய குழு பெங்களூரு சென்று, சில 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களிடம் 'ஸ்டடி' செய்தது. தற்போது,'டெண்டர் டாக்குமென்ட்' தயார் செய்து வருகிறோம்; பிறகு 'டெண்டர்' விடப்படும். இந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டுள்ளன.அனைத்தும் நிறுவனத்தின்கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மாநகராட்சி தரப்பில் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களை தேர்வு செய்து, அங்கு இ-சைக்கிள்கள்இயக்கதிட்டமிட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.