திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மே 24 முதல் 26 வரை ஜமாபந்தி நடக்கிறது என தாசில்தார் பார்த்திபன் தெரிவித்தார்.
மே 24ல் திருப்பரங்குன்றம், நிலையூர் 2 பிட், வாலனேந்தல், புதுக்குளம் 3 பிட், சூரக்குளம், தோப்பூர், ஆஸ்டின்பட்டி பகுதிகள். மே 25ல் தனக்கன்குளம், தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, மேலநெடுங்குளம், நிலையூர் 1 பிட், வேடர்புளியங்குளம், மாடக்குளம், புதுக்குளம் 2 பிட் பகுதிகள். மே 26ல் எலியார்பத்தி, பாரப்பத்தி, பெரிய கூடக்கோவில், கொம்பாடி, நெடுமதுரை, ஒத்தை ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், தொட்டியபட்டி, வலையபட்டி, முல்லாகுளம், பெருங்குடி, வலையங்குளம் பகுதிகளுக்கு நடக்கிறது.