மதுரை : மதுரை பாலரெங்காபுரம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் அரசின் சுகாதார திருவிழா முகாம் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் நடந்தது.
மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், 14 பேருக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
பூமிநாதன் எம்.எல்.ஏ., மண்டல தலைவர் முகேஷ்சர்மா, நகர்நல அலுவலர் ராஜா, உதவி அலுவலர் தினேஷ்குமார், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி, செல்வி, சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மருத்துவ அலுவலர்கள் ஸ்ரீகோதை, புவனேஸ்வரி, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் பங்கேற்றனர்.