பள்ளி, கல்லுாரி செய்திகள்
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அகிம்சை கருத்தரங்கு

மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் காந்தி மியூசியத்தின் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அகிம்சை குறித்த கருத்தரங்கு நடந்தது. மியூசிய கணக்கர் சுமித்ரா வரவேற்றார். செயலாளர் நந்தாராவ், கல்லுாரி செயலாளர் குமரேஷ், டீன் கவிதா முன்னிலை வகித்தனர். முதல்வர்(பொறுப்பு) சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நந்தினி அறிமுகம் செய்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் ராஜபிரபா, யாதவர் கல்லுாரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் உஷா, சதீஷ், கல்வி அலுவலர் நடராஜன் பேசினர். நிறுவன முதல்வர் தேவதாஸ் நன்றி கூறினார். பேராசிரியை நந்தினி ஏற்பாடுகளை செய்தார்.



கருத்தரங்கம்

மதுரை யாதவர் கல்லுாரியில் கணினி துறை சார்பில் வெற்றிக்கான திறன்பாட்டு வழி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் நாராயணன் தலைமை வகித்தார். மதுரை பால்சூஸ் சக்சஸ் அகாடமி நிர்வாக பங்குதாரர் இசக்கி கணேஷ் பேசினார். சுயநிதிப்பிரிவு இயக்குநர் குணசேகரன் வாழ்த்தினார். துறைத்தலைவர் மாரிமுத்து வரவேற்றார்.

பயிற்சி பட்டறை

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் வணிகவியல், கம்ப்யூட்டர் பயன்பாட்டுத்துறை சார்பில் எம்.எஸ்.எக்சலில் தகவல் பகுப்பாய்வு என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி தலைமை வகித்தார். துறைத்தலைவர் உதயா வரவேற்றார். இயக்குநர் ஸ்ரீதர் வாழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை எச்.சி.எல்., சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் எக்ஸ்சலில் அடிப்படை பயிற்சி, தகவல் பகுப்பாய்வு செய்தல், தகவல்களைத் தயாரித்தல் குறித்து விளக்கினார்.

கருத்தரங்கம்

மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லுாரியில் வாசகர், எழுத்தாளர், நாடக கலை மன்றம் சார்பில் புனைவு இலக்கியமும், வரலாறும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாணவி அபிநயா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் லோகேஷ் கலந்துகொண்டார். கல்லுாரி தலைவர் மாரீஸ்குமார், செயலாளர் கரிக்கோல்ராஜ், தாளாளர் ஜெயக்குமார், பொருளாளர் நல்லதம்பி, முதல்வர் கார்த்திகாராணி வாழ்த்தினர். மாணவி அமுத மீனா நன்றி கூறினார்.

தமிழ்மன்ற கூட்டம்

மதுரை மீனாட்சி அரசு கல்லுாரியில் முதுகலை தமிழ் அவ்வை மன்ற கூட்டம் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் விஜயராணி வரவேற்றார். முதல்வர் வானதி தலைமை வகித்தார். காந்தி மியூசிய காப்பாட்சியர் நடராஜன் 'மகாத்மாவை உருவாக்கிய இலக்கியங்கள்' என்ற தலைப்பில் பேசினார். இணைப்பேராசிரியர்கள் யாழ் சந்திரா, சத்யா உதவி பேராசிரியர் வளர்மதி கலந்து கொண்டனர்.

பாராட்டு விழா

மதுரையில் மாவட்ட அளவில் நடந்த போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் விழிப்புணர்வு போட்டிகளில் முதலிடம் வென்ற சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் சபரிக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன் சான்றிதழ் வழங்கினார். உசிலம்பட்டி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நுார் முகமது, உடற்கல்வி ஆசிரியர் முத்துராமர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X