அனல் மின் நிலையத்தில்இன்ஜி., மர்ம மரணம்
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மீஞ்சூர் :வட சென்னை அனல் மின் நிலையத்தில், உதவி பொறியாளர் ஒருவர், துாக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 36. இவர் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள, வட சென்னை அனல் மின் நிலையத்தின், இரண்டாவது நிலையில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.அனல் மின் நிலைய குடியிருப்பில் தங்கியிருந்தார். வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த அரிகிருஷ்ணன் மாயமானார்.இது குறித்து, அவரது மனைவி இளவரசி, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, மீஞ்சூர் போலீசார், அவரை தேடி வந்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு, அரிகிருஷ்ணன், அனல் மின் நிலையத்தின் இரண்டாவது தளத்தில் துாக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அரிகிருஷ்ணன் சடலத்தை மீட்டனர்.அரிகிருஷணன் எழுதியதாக கடிதம் ஒன்றை, போலீசாரிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அதில், என்னால் தொடர்ந்து, அதிகப்படியான பணிச்சுமையை தொடர முடியவில்லை. என்னுடைய குடும்பத்தாருடன் என்னால் நேரம் செலவிட முடியவில்லை.'என் மனைவி, மகன்கள், அம்மா, பெரியம்மா, பெரியப்பா ஆகியோரை விட்டு பிரிகிறேன். இதற்கு யாரும் காரணம் இல்லை' என, எழுதப்பட்டிருந்தது.அதே சமயம் அரிகிருஷ்ணனின் குடும்பத்தினர், இது அவருடைய கையெழுத்து இல்லை எனவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார், அனல்மின் நிலையத்தில் உள்ள 'சிசிடிவி' காட்சிகள், மொபைல் போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X