திருக்கழுக்குன்றம், :திருக்கழுக்குன்றத்தில் சாலையில் தேங்கும் கழிவு நீரால், நோய் பரவும் ஆபத்து உள்ளது.திருக்கழுக்குன்றத்தில் மார்க்கெட் பகுதி, சதுரங்கப்பட்டினம் சாலை சந்திப்பு அருகில் மழை நீர் வடிகால்வாய் உள்ளது.இப்பகுதி கடைகள், கால்வாய் பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இதனால், கால்வாய் துார்ந்துள்ளது.கால்வாயில் கழிவுநீர் விடும் நிலையில், ஆக்கிரமிப்பு, குப்பை அடைப்பால், சாலையில் கழிவு நீர் பெருக்கெடுக்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு, மக்கள் அருவருப்புடன் நடந்து செல்கின்றனர்.பல நாட்கள் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி, நோய் பரவும் ஆபத்தால், இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.கழிவுநீரால், சாலை மைய பகுதியில் விபத்து ஆபத்துடன் கடக்கின்றனர். கழிவுநீர் தேங்காமல் தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.