அச்சிறுப்பாக்கம், :அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், சொத்து வரி உயர்வு குறித்து, சிறப்பு பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தி.மு.க., தலைவர் நந்தினி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். பேரூராட்சியின் 15 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.அப்போது, தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., வார்டு உறுப்பினர்களான சாந்தி, பிரியங்கா, ஜெயலட்சுமி, சகுந்தலாமணி ஆகியோர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பின், பேரூராட்சி அலுவலகம் எதிரே சொத்து வரியை உயர்த்திய ஆளும் தி.மு.க., அரசை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.பேரூராட்சி தலைவர், சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்து, தீர்மானம் நிறைவேற்றினார்.