உடுமலை:அகிம்சை மற்றும் பிற காந்திய முறை வாயிலாக, சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, 'காந்தி அமைதி விருது'க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் வினீத் அறிக்கை:தேசியம், இனம், மதம், பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.விரும்புவோர், தகுந்த ஆதாரங்களுடன், வரும், 26ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், அறை எண்: 35 மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.கூடுதல் விபரங்களுக்கு, 0421 2971168 என்ற எண்ணை அழைக்கலாம்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.