7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சிக்கல்:பட்டியல் தயாரிப்பு இழுபறி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சிக்கல்:பட்டியல் தயாரிப்பு இழுபறி
Added : மே 21, 2022 | |
Advertisement
 

உடுமலை:மாவட்டத்தில், உயர்கல்வியில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதிபெறும் பிளஸ் 2 மாணவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் பணி இழுபறியாக உள்ளது.அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண், கால்நடை, மீன்வளர்ப்பு, சட்டக்கல்லுாரி, தனியார் கல்லுாரி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து கல்லுாரிகளிலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வு நடந்து வரும் நிலையில், அடுத்து உயர்கல்வி பெற விண்ணப்பிக்கும் மாணவர்களில், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்கு பிளஸ் 2 வரை மாணவர்கள் அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும்.ஒவ்வொரு மாணவர்களும் பிளஸ் 2 வரை எந்தெந்த பள்ளியில் படித்தார்கள் என்பதற்கான விபரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.அவ்வகையில், இதற்கான பணி, கடந்த, 13க்குள் முடிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், திருப்பூர் மாவட்டத்தில், இப்பணி முழுமை பெறாமல் உள்ளது.இது குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:இதற்கு முன் வேறு பள்ளியில் படித்திருப்பின், மாணவர்களிடம் கேட்டு அவ்விபரம் பதிவு செய்யப்படுகிறது.
அப்பள்ளி அரசுப்பள்ளிகள் எனில் உடனுக்குடன் சான்றிதழ்களை 'அப்டேட்' செய்யப்பட்டும் வருகிறது.ஆனால், தனியார் பள்ளி எனில் அதற்கான சான்றிதழ் பதிவிடுவதில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பள்ளியையும் அழைத்து, 'அப்டேட்' செய்யச்சொல்ல வேண்டிள்ளது. இதனால் சான்றிதழ் பெறுவதில் தாமதமாகிறது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''இம்மாத இறுதிக்குள், அரசுப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X