உடுமலை:இந்திய அஞ்சல் துறையில், 'கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக, இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வகையில், துவக்கத்தில், கிராம மக்கள் பெரும்பாலானோர் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைந்தனர். பின், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரும் கிராமப்புற மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதையடுத்து, இலக்கு நிர்ணயித்து, கிராமங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.