காப்பீடு திட்ட இலக்கு பூர்த்தி அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
காப்பீடு திட்ட இலக்கு பூர்த்தி அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு
Added : மே 21, 2022 | |
Advertisement
 

உடுமலை:இந்திய அஞ்சல் துறையில், 'கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக, இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வகையில், துவக்கத்தில், கிராம மக்கள் பெரும்பாலானோர் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைந்தனர். பின், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரும் கிராமப்புற மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதையடுத்து, இலக்கு நிர்ணயித்து, கிராமங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, துணை மற்றும் கிளை அஞ்சலகங்கள், காப்பீடு இலக்கை அடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.அந்த வரிசையில், இலக்கை பூர்த்தி செய்ததன் பேரில், உடுமலை துணை கோட்ட அஞ்சலகத்திற்கு உட்பட்ட கிராம துணை அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை தலைமை அஞ்சலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொள்ளாச்சி கோட்டக்கண்காணிப்பாளர் இந்திரா தலைமை வகித்தார். துணைக்கோட்ட கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சந்தோஷ்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை அஞ்சலகர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X