செய்திகள் சில வரிகளில் சேலம்
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

இன்று தேவி தாயார் வசந்தோற்சவம்
சேலம்: சேலம், வரதராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சார்பில், வசந்தோற்சவம் இன்று தொடங்குகிறது. அதில் பெருந்தேவி தாயார் வசந்தோற்சவம், இன்று முதல், வரும், 29 வரை நடக்கிறது. பெருமாள் வசந்தோற்சவம், அடுத்த மாதம், 5 முதல், 15 தேதி வரை நடக்க உள்ளது. வசந்தோற்சவ நாளில், தினமும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடக்கும் என, தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்விளக்கு அமைக்க பூமி பூஜை

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சியில், 'நமக்கு நாமே' திட்டத்தில், 13 வார்டுகளில், தலா, 4.10 லட்சம் ரூபாயில், 53.30 லட்சம் ரூபாய் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஆய்வு
ஆத்துார்: கெங்கவல்லி தாலுகாவின், தம்மம்பட்டி, கூடமலை, சின்னகரட்டூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நேற்று, சேலம் ஆவின் துணை பதிவாளர் செந்தில்குமார் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்த பால் மாதிரிகளை சோதனை செய்து, பாலின் தரத்தை பரிசோதனை செய்தனர்.
ரயிலில் வந்த 2,700 டன் உரம்
சேலம்: வடமாநிலங்களிலிருந்து சேலத்துக்கு சரக்கு ரயில் மூலம், உரம், தானியங்கள், கோதுமை, சிமென்ட் உள்ளிட்டவை அனுப்பப்படுகின்றன. அதன்படி, ஆந்திராவில் இருந்து, 2,700 டன் உரம் ஏற்றி வந்த சரக்கு ரயில், சேலம் மார்க்கெட் ஸ்டேஷனுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இவற்றை, சுமைதுாக்கும் பணியாளர்கள், லாரிகளில் ஏற்றி, பல்வேறு பகுதிகளில் உள்ள குடோன்களுக்கு அனுப்பினர்.
கங்கா ஆரத்தி வழிபாடு
சேலம்: சேலம், வாசவி மஹால் அருகே, திருமணிமுத்தாற்றின் தென்கரையில் உள்ள கணபதி கோவிலில், சனாதன தர்ம வித்யா பீடம் சார்பில் கங்கா ஆரத்தி வழிபாடு நேற்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காசியில் நடப்பது போன்று கங்கா ஆரத்தி, காவேரி ஆரத்தி, உலக நன்மைக்கு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டன. இதையடுத்து விநாயகரை சுற்றிவந்து, அங்குள்ள ஊற்று நீரை கங்கையாக பாவித்து விளக்கு விடப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஜங்ஷனில் விழிப்புணர்வு பேரணி
சேலம்: சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை தேவையின்றி இழுக்கக்கூடாது என விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. ரயில்வே கோட்ட பாதுகாப்பு அலுவலர் பிரவீன்குமார், மக்களுக்கு துண்டுபிரசுரம் கொடுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில், ரயிலில் உள்ள அபாய சங்கிலியை தேவையின்றி பயன்படுத்தி ரயிலை நிறுத்தினால் விதிக்கப்படும் அபராதம், பயணியர் அவதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேளாண் துறை அமைச்சர் ஆய்வு
ஆத்துார்: செல்லியம்பாளையத்தில், வரும், 24ல், தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடு குறித்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை உள்ளிட்டோர் இருந்தனர்.
‍அறநிலையத்துறையில் 16 பேர் இடமாற்றம்
சேலம்: ஹிந்து சமய அறநிலையத்துறையில் முதுநிலைப்படி ஆய்வர், தலைமை எழுத்தர் என, 16 பேருக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆய்வர் ஜெயமணி, மருதமலை சுப்ர
மணியர் கோவில் கண்காணிப்பாளராகவும், சேலம் தலைமை எழுத்தர் மணிமாலா, கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் உள்பட, 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி இடமாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கமிஷனர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
ரயில் சிங்காநல்லுாரில் நிற்கும்
சேலம்: கோவை - ஈரோடு முன்பதிவற்ற ரயில், சிங்காநல்லுாரில் நின்று செல்லும். அதன்படி, கோவை - ஈரோடு முன்பதிவற்ற ரயில், இனி சிங்காநல்லுார் ஸ்டேஷனுக்கு மாலை, 6:56க்கு வந்து, 6:57க்கு புறப்படும். மறுமார்க்கத்தில், காலை, 8:56க்கு வந்து, 8:57க்கு கிளம்பும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
வீட்டில் புகுந்த புள்ளிமான்
தலைவாசல்: லத்துவாடியையொட்டி உள்ள வனப்பகுதியில், புள்ளி மான்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, பெண் புள்ளி மானை, தெரு நாய்கள் துரத்தின. ஊருக்குள் புகுந்த அந்த மான், ராஜேந்திரன், 45, என்பவர் வீட்டில் புகுந்துள்ளது. அவர், கெங்கவல்லி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனக்காப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர், மானை மீட்டு, பொன்னாளியம்மன் நீரோடையொட்டி உள்ள வனப்
பகுதியில் விட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி புகார்
தலைவாசல்: தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் வீரகனுார் பிர்காவுக்கு ஜமாபந்தி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா தலைமை வகித்தார். அதில், வீரகனுார், தெற்குமேட்டை சேர்ந்த, நரிக்குறவர் சமுதாயத்தினர், 'அரசு மூலம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்' என, மனு அளித்தனர். மூன்று வருவாய் பிர்காவில் நடந்த முகாமில், 969 மனுக்கள் அளித்தனர். அதில், 43 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, தாசில்தார் வரதராஜன் தெரிவித்தார்.
களைகட்டிய எருதாட்டம்
வீரபாண்டி: சேலம், பூலாவரியில் உள்ள ஊரடி முனியப்பன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று எருதாட்டம் நடந்தது. அதற்காக, கடந்த, 14ல் வடக்கயிறுகளுக்கு பூஜை செய்து காளைகளை பிடிக்க மக்கள் சென்றனர். 18ல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலுக்கு காளைகளை அழைத்து வந்தனர். தொடர்ந்து பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, முனியப்பன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த எருதாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. ஏராளமானோர் கண்டுகளித்தனர். அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர், 26, காளை முட்டி படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X