சென்னை - கோயம்பேடு, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சேலம் - தலைவாசல், மதுரை - மாட்டுத்தாவணி, திருநெல்வேலி - நயினார்குளம், நாகர்கோவில் - வடசேரி ஆகிய மார்க்கெட்டுகள், தமிழகத்தின், 175 உழவர்சந்தைகளுக்கு தினமும், 30 லாரிகளில் மட்டும், தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவற்றை, பெரிய வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், மொத்தமாக வாங்கி
விடுகின்றனர்.
இதனால் மார்க்கெட், உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து சரிந்து விலை உயர்ந்து வருகிறது.
அதன்படி கடந்த மாதம், உழவர் சந்தைகளில், முதல் ரக நாட்டு தக்காளி கிலோ, 42க்கு விற்றது, தற்போது, 74 ரூபாய், இரண்டாம் ரகம், 40க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்தது. உயர்ரக(கிராஸ்) முதல் ரகம், 40க்கு விற்றது, 72 ரூபாய், இரண்டாம் ரகம், 35க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெளி மார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம், 52க்கு விற்றது, 90 ரூபாய், இரண்டாம் ரகம், 50க்கு விற்றது, 85 ரூபாய்க்கு விற்பனையானது. உயர்ரக (கிராஸ்) முதல் ரகம், 50க்கு விற்றது, 85 ரூபாய், இரண்டாம் ரகம், 45க்கு விற்றது, 80 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் நடுத்தர ஓட்டல், சாலையோர கடைகளில் தக்காளி சட்னியை
நிறுத்திவிட்டனர்.
சேலம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கவேல் கூறுகையில், ''சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து மார்க்கெட், உழவர்சந்தைகளுக்கு கொண்டு வரப்படும் தக்காளி வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் மார்ச்சில் கிலோ, 15 முதல், 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது, 74 முதல், 90 ரூபாய் வரை விலை
போகிறது,'' என்றார்.