குரூப் 2 தேர்விற்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம் டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 போட்டித் தேர்வு நடைபெறு வதையொட்டி முன்னேற்பாடு பணி குறித்து ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரியில் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி தலைமை வகித்து கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு இன்று நடக்கிறது. கிருஷ்ணகிரியில், 11,349 பேர், ஓசூரில், 7,790 பேர், போச்சம்பள்ளியில், 5,278 பேர் என மொத்தம், 3 தேர்வு மையத்தில், 78 தேர்வுக்கூடங்களில், 24 ஆயிரத்து, 417 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வை கண்காணிக்க, 78 முதன்மை கண்காணிப்பாளர்கள், 6 பறக்கும் படை, 20 நடமாடும் அலகு, 156 ஆய்வு அலுவலர்கள், 78 வீடியோ கிராபர்கள், 23 ஆயுதம் ஏந்திய காவலர்கள், 78 காவலர்கள் என மொத்தம், 439 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணைய பிரிவு அலுவலர் நாராயணன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.