போலீஸ் டைரி - சேலம்
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

'போதை'யால் பறிபோனது உயிர்
சேலம்: பொன்னம்மாபேட்டை, சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் தியாகராஜன், 50. நெசவு தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் அதிகாலை, போதையில், வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தார். அப்போது, கால் இடறி விழுந்தார். மக்கள், அவரை மீட்டு, வீட்டுக்குள் கொண்டு சென்றனர். காதில் இருந்து ரத்தம் வெளியேறியதால், உடனே, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடன் மீது பாய்ந்தது குண்டாஸ்

சேலம்: நங்கவள்ளி, தெப்பக்குளம் தெருவை சேர்ந்தவர் ராஜா, 45. இவர் மீது, இடைப்பாடி, சேலம் டவுன், செவ்வாய்ப்பேட்டை, பள்ளப்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட, இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், சிறுவர்கள், வேலைக்கு செல்லாதவர்களை கூலிக்கு நியமித்து, பல்வேறு இடங்களில், வாகனங்களை திருடி விற்று வந்தார். இதனால், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் டவுன் போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, கமிஷனர் நஜ்முல் ேஹாதா நேற்று உத்தரவிட்டதால், ராஜா மீது குண்டாஸ் பாய்ந்தது.
தீ விபத்தில் பெண் பலி
சேலம்: அரிசிபாளையம், சின்னப்பன் தெருவை சேர்ந்த பூபதி மனைவி சந்திரா, 58. இவர், கடந்த, 18 மாலை, 4:00 மணிக்கு, வீட்டின் கட்டிலுக்கு கீழ், கொசுவர்த்தியை பற்ற வைத்து விட்டு துாங்கினார். நள்ளிரவில், அந்த சுருளில் சேலை பட்டு தீப்பிடித்தது. இதில், அவர் படுகாயம் அடைந்து பலியானார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மூச்சுத்திணறி கர்ப்பிணி சாவு
சேலம்: மேச்சேரி, எம்.காளிப்பட்டியை சேர்ந்த, பிரபாகரன் மனைவி ஐஸ்வர்யா, 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் காலை, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உறவினர்கள், மேச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்கு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாலை, 4:00 மணிக்கு, அவர் உயிரிழந்தார். பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மின் ஊழியரை தாக்கியவருக்கு காப்பு
கெங்கவல்லி: நடுவலுார், பள்ளக்காட்டை சேர்ந்தவர் லட்சுமணன், 47. கெங்கவல்லி மின்வாரிய அலுவலகத்தில், மின் கணக்கீட்டாளராக உள்ளார். இவர், கணவாய்காட்டை சேர்ந்த, விக்னேஷ், 27, என்பவரிடம், கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம், பணியில் இருந்த லட்சுமணனை, விக்னேஷ், அவரது உறவினர் செல்லமுத்து, 33, ஆகியோர் தாக்கினர். இதுகுறித்து லட்சுமணன் புகார்படி, கெங்கவல்லி போலீசார், விக்னேைஷ கைது செய்தனர்.
டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
சேலம்: சங்ககிரி அருகே, வைகுந்தத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. தனியார் பஸ்சில் டிரைவராக உள்ளார். மற்றொரு தனியார் பஸ் டிரைவர்கள், கஞ்சன்புதுாரை சேர்ந்த தங்கராஜன், 31, மஞ்சகாளிப்பட்டி, ஜமுக்காளன்காட்டை சேர்ந்த சுதர்சனன், 33, அண்ணாமலை, 30. இவர்கள் இடையே, பஸ் புறப்பட்டு செல்வது தொடர்பான தகாராறால் முன் விரோதம் இருந்தது. கடந்த, 18 இரவு, 11:30 மணிக்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்டில், பஸ்சை நிறுத்துவது தொடர்பாக, கார்த்திகேயனுக்கும், தங்கராஜன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், கார்த்திகேயனை, தங்கராஜன் தரப்பினர் தாக்கினர். காயம் அடைந்த கார்த்திகேயன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, தங்கராஜன், சுதர்சனை கைது செய்து, அண்ணாமலையை தேடுகின்றனர்.
வெள்ளி பட்டறை 'ஓனர்' விபரீதம்
சேலம்: பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சரவணன், 33. இவர் வீட்டில், வெள்ளி பட்டறை நடத்திவந்தார். கொரோனா காலத்தில் போதிய ஆர்டர் இல்லாததால், தொழிலை தொடர பலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் திருப்பி செலுத்த முடியவில்லை. மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் மாலை, வெள்ளியை உருக்க பயன்படுத்தும், 'சல்பர்' ஆசிட்டை குடித்து விட்டார். உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு பலியானார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விசைத்தறி தொழிலாளி விதிமீறல்
மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, கூத்தம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 43; தறித்தொழிலாளியான இவர், விசைத்தறியில் சேலை ஓட்டிவந்தார். சில வாரமாக, கைத்தறியில் நெய்யப்படும் பட்டு சேலையை, விதிமீறி விசைத்தறியில் ஓட்டியுள்ளார்.
இதனால், கைத்தறி, துணிநுால் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆய்வு செய்து, செல்வகுமாரிடம் இருந்த பட்டு சேலைகளை பறிமுதல் செய்தனர். மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X