திருப்பூர் மாவட்டம் மூலனுார் வேளாண் விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 2,750 குவின்டால் விற்பனைக்கு வந்தது. 3.4௫ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. ஆர்.சி.எச்., ரகம் முதல் தரம் குவின்டால், 15,698 ரூபாய், இரண்டாம் தரம், 12,050 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவரை இல்லாத உச்சமாக பருத்திவிலை குவின்டாலுக்கு, 15,698 ரூபாய்க்கு விற்பனையானதால் பருத்தி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் சிலர் கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக பருத்தி நல்ல விலைக்கு விற்கிறது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ளோம். வரும் சீசனில், இன்னும் கூடுதலாக ஏக்கரில் பருத்தி பயிரிட
திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.