ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட போலீசார், அதிகாரிகள் மீதான குற்றங்கள் குறித்து, பல உண்மைகளை டி.ஜி.பி.,யிடம் தெரிவிக்க விரும்புவதாக கூறி, மதுரை பட்டாலியன் போலீஸ்காரர் கனகராஜ் வெளியிட்ட 'வீடியோ' குறித்து டி.ஜி.பி., அலுவலகம் விசாரிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கோடாரியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இட மாற்றத்தில் மதுரை பட்டாலியன் போலீசாக பணியில் சேர உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட போலீசார் குறித்து பல உண்மைகளை, டி.ஜி.பி., சைலேந்திர பாபுவிடம் கூற விரும்புவதாக கூறி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், டி.ஜி.பி.,யை சந்திக்க, பலமுறை சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்றதாகவும், அங்குள்ளவர்கள் அவரை சந்திக்க விடாததால், வீடியோவை வெளியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.எனினும், குடும்ப பிரச்னை காரணமாகவே அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த வீடியோவால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.