தாராபுரம் நகராட்சியின் அவசர கூட்டம், நேற்று மாலை நடந்தது. சேர்மன் பாப்பு கண்ணன் தலைமை, ஆணையர் ராமர் முன்னிலை வகித்தனர்.
சொத்து வரி உயர்வு பற்றிய தீர்மானம் நிறைவேற்ற இருந்த நிலையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நாகராஜன், ஷீலாதேவி, கல்பனா மற்றும் பா.ஜ., உறுப்பினர் மீனாட்சி வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியிலும், அ.தி.மு.க., அரசு வரி திணிப்பை செய்ததில்லை. தற்போதைய அரசு, பொருளாதார சுமையை குறைக்க, வேறு வழி முறைகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.