கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைக்கல்லுாரி, உன்னத பாரத இயக்ககம், பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகமும் இணைந்து, ஒருங்கிணைந்த வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை -வாய்ப்புகளும், வழிமுறைகளும் என்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். கல்லுாரி முதன்மை செயல் அதிகாரி ஜெகதா லக்ஷ்மணன் வரவேற்றார். கல்லுாரி தாளாளர் வெங்கடாசலம், முதன்மையர் நடேசன், துறை தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசின் வேளாண் மானிய திட்டங்கள், பயிர் காப்பீட்டு திட்டங்கள், உழவன் கைபேசி செயலி சேவை, உயிரியல் முறையில் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறை, மண் மாதிரி எடுக்கும் வழி முறை பற்றிய சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்து தரப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் உயிரின் சுவாசம் அறக்கட்டளை சார்பில் இலவசமாக மரக்கன்று வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் மைதிலி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உன்னத பாரத அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மங்களகவுரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் செய்திருந்தனர்.