நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் சக பெண்களுடன் தனலட்சுமி இரவு 10:00 மணிக்கு படுத்து துாங்கினார். இன்று அதிகாலை 1:00 மணிக்கு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்தார். துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் தன் மனைவி இருக்கிறாரா என பார்த்தார். பெண்கள் அனைவரும் கொசு கடிக்கு பயந்து முகத்தை மூடி துாங்கிக் கொண்டிருந்தனர்.
இதனால் துாங்கிக் கொண்டிருந்த பெண்களில் ஒருவரை தன் மனைவி என நினைத்து கத்தியால் குத்தினார். அந்த பெண் அலறிக்கொண்டு ஓட முயன்ற போது மீண்டும், மீண்டும் கத்தியால் குத்தியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டதும் அந்த பெண்ணுக்கு பக்கத்தில் படுத்திருந்த தனலட்சுமி எழுந்தார். தன் மனைவியை பார்த்த தேவேந்திரன் கத்தியால் அவரை சரமாறியாக குத்தினார். படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆம்பூர் கம்பிக்கொல்லையை சேர்ந்தவர் நவீத், 30, என்பவர் மனைவி கவுசர், 27. ஒரு திருட்டு வழக்கில் கைதான நவீத் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கவுசரை அங்கிருந்தவர்கள் விரட்டிய விட்டதால், ஆம்பூர் நேதாஜி சாலை பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தார். நள்ளிரவு கத்தியுடன் தேவேந்திரன் அங்கு வந்து மனைவியை தேடினார். அங்கிருந்தவர்கள் முகத்தை துணியால் மூடியபடி துாங்கினர். தனலட்சுமி எப்போதும் குறட்டை விட்டு துாங்குவார். அங்கிருந்த பெண் ஒருவர் குறட்டை விட்டு துாங்கினார். அவர் தான் தன் மனைவி தனலட்சுமி என நினைத்து கவுசரை தேவேந்திரன் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். படுகாயமடைந்த தனலட்சுமி வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.