ஒரு நாட்டின் தொன்மையான வரலாறு மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்ள, ஆகழாய்வுகள் மூலம் கிடைக்கும் தொால்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவை முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.
கீழடி ஆகழாய்வுக்கு பிறகு, தமிழகத்தில் தனியாக தொல்லியல் துறை துவங்கப்பட்டு, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் பொருநை ஆற்றுப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில், அகழாய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த கண்காட்சியில், கீழடி, பொருநை, கொடுமணல், மயிலாடும்பாறை மற்றும் சிவகளை உள்ளிட்ட பல இடங்களில் கிடைத்த தொல்பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு நடந்த இடங்கள், மினியேச்சர்களாக உருவாக்கப்பட்டுள்ளன. அதை பார்க்கும் போது அகழாய்வு நடந்த இடங்களை, நேரில் பார்ப்பது போல் உள்ளது. தமிழகத்தின் 6000 ஆண்டு பழமையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. அனுமதி இலவசம்.