கோவை குற்றாலம் அருவியில் மழையையும், சில்லென்ற வானிலையையும் மக்கள் உற்சாகமாக அனுபவித்தனர்.
கோடை விடுமுறை காரணமாக, கோவை குற்றாலம் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வப்போது, இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் வரை, அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மதியம் கனமழை பெய்ததால், அருவியில் வரும் நீரின் நிறம் மண் கலந்து வந்தது. வெள்ளப்பெருக்கு அபாயம் இருந்ததால், அபாயச் சங்கு ஒலிக்கவிடப்பட்டது.அருவியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.அதேசமயம், அருவிக்குச் செல்லும் வழி முழுக்க மழை பெய்ததால், மழையில் நனைந்தபடியே வனத்தையும் ரசித்தபடி திரும்பினர்.'அருவியில் நீர் வரத்து அதிகரிக்காது என உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும்' என, சூழல் சுற்றுலா குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.