கோவை மக்கள் மனங்களை...இசையால் வருட வருகிறார் இளையராஜா!
Added : மே 21, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

இந்த நுாற்றாண்டின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களில், மிக முக்கியமானவர் இளையராஜா. 1976ம் ஆண்டு வெளி வந்த அன்னக்கிளி திரைப்படத்தில் இருந்து, இசையால் நம் மனங்களை கொள்ளையடித்து வருபவர்.

46 ஆண்டுகளில், 1500 திரைப்படங்கள், 8500 பாடல்கள், 20 ஆயிரம் இசை கச்சேரிகள் என, தன் இசை சாம்ராஜ்ய எல்லையை, விரிவுபடுத்தி கொண்டே இருக்கிறார். 80 வயதை தொடப்போகும் இந்த இசையின் ராஜா!ஜூன், 2ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார் ராஜா.கோவை கொடிசியா மைதானத்தில், ஜூன் 2ம் தேதி மாலை 6:30 மணிக்கு நடக்கும் இந்த இசை நிகழ்ச்சியில், பிரபல திரையிசை பின்னணி பாடகர்கள் மனோ, கார்த்திக், உஷா உதுப், எஸ்.பி.பி.சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஸ்வேதா மோகன், விபாவரி ஆப்தே ஜோஷி, அனிதா, பிரியா ஹேமேஷ், சுர்முகி உள்ளிட்ட பல பாடகர்கள் பாடி அசத்த உள்ளனர். இவர்களோடு இசைஞானியும் பாடுகிறார்.அவர் இசையமைத்த சில பாடல்கள் உருவான விதம் பற்றிய, சுவாரஸ்யமான தகவல்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இளையராஜாவை வாழ்த்த, தமிழ்த்திரை உலக பிரபலங்கள் கோவையை நோக்கி திரண்டு வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியின் போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சி, கோவை ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி போஸ்டரை வெளியிட்டார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் கூறுகையில்,''ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், சக்தி மசாலா, கரூர் வைசியா வங்கி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். டிக்கெட்டுகள், 1000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளன. பேடிஎம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாகவும் கிடைக்கும்,''என்றார்.விபரங்களுக்கு, 88838 61616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X