திருப்பூர்:உள்ளாட்சி அமைப்பு களில், துாய்மை பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணம் வழங்கியது குறித்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் செல்வக்குமார், நேற்று கலெக்டரை சந்தித்து அளித்த மனு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட வேண்டும். அப்படி, உபகரணம் வழங்கினாலும், முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை, சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
மாறாக, எந்தவொரு உள்ளாட்சி அமைப்பிலும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. துாய்மை பணியாளரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.தாராபுரம் நகராட்சியில், துாய்மை பணியாளரை, தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துாய்மை பணியாளரை, நலவாரியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.