திருப்பூர்:தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன், பா.ஜ., சதிவேலையில் ஈடுபட்டு வருவதாக, இந்திய கம்யூ., கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இது குறித்து, அதன் மாவட்ட செயலாளர் ரவி, முதல்வருக்கு அனுப்பிய கடிதம்:தமிழகத்தில், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன், பா.ஜ., உள்ளிட்ட அமைப்புகள், சதிவேலையில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயம், தொழில் வளத்துடன் உள்ள தமிழகத்தில், ஜவுளித்தொழில் பிரதானமாக உள்ளது.வடமாநில தொழிலாளர்கள் இதனால், வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.