திருப்பூர்:கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், 30ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை சார்பில், 17 முதல், 35 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான, குரலிசை, குருவியிசை, பரதம், கிராமிய நடனம், ஓவிய போட்டி நடக்க உள்ளது.குரலிசை போட்டி; வயலின், வீணை, புல்லாங்குழல், சாக்ஸாபோன், கிளாரினெட் கருவி இசைப்பாளர், தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ளவர் பங்கேற்கலாம்.
தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் பிரிவுகளை சார்ந்தவர்கள், சில தாளங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பரதத்தில், முழு மார்க்கம் நிகழ்த்துபவர் பங்கேற்கலாம்.கிராமிய நடனத்தில், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம், மலைமக்கள் நடனம் போன்ற பாரம்பரிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
ஓவிய போட்டியில் பங்கேற்பவர், அக்ரலிக் மற்றும் 'வாட்டர் கலர்' கொண்டுவர வேண்டும். மாவட்ட அளவில், வெற்றி பெறுவோர்களுக்கு, ரொக்கப்பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், 30ம் தேதிக்குள், 9191 5008 5001 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.விவரங்களுக்கு, மண்டல இயக்குனர் அலுவலகத்தை, 0422 2610290 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.