திருப்பூர்:தாராபுரம் அருகே நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ், 65. விவசாயி. கடந்த மார்ச் 30ம் தேதி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள வங்கி ஒன்றில், அடமானம் வைக்கப்பட்ட நகையை மீட்க, 6.50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு டூவீலரில் சென்றார்.பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு ஊழியர் அறிவுறுத்தினர். ஆனால், துரைராஜ் பணத்தை கட்டாமல், வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். ஜீவா காலனி அருகே வந்தபோது, பின்னால், டூவீலரில் வந்த, இருவர், கீழே பணம் விழுந்து கிடப்பதாக கூறி, துரைராஜின் கவனத்தை திசை திருப்பி, டூவீலர் கவரில் இருந்த, 6.50 லட்சம் ரூபாயை திருடி சென்றனர்.
மற்றொரு திருட்டு
கடந்த 28ம் தேதி, தளவாய்பட்டினத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து, 50, தாராபுரத்துக்கு டூவீலரில் சென்றார். ஐந்து முக்கு பார்க் அருகே டூவீலரை நிறுத்தியிருந்த போது, மர்ம நபர்கள் நோட்டமிட்டு, டூவீலரில் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாயை திருடி சென்றனர்.இவ்விரு திருட்டு தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்த தாராபுரம் போலீசார், திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த ஜானகிராமன், 44, முரளி, 60 ஆகியோரை கைது செய்து, 5.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் வங்கிக்கு வருவோரை நோட்டமிட்டு பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.