கோவை:செல்வபுரத்தில் மாடு திருடிய இருவர், போலீசாரிடம் சிக்கினர்.கோவை வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனியை சேர்ந்தவர் அஜீத் குமார், 27. பசு மாடுகளை வளர்க்கும் இவர், பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது 7 பசு மாடுகளையும், மே 19ம் தேதி கெம்பட்டி காலனி கிச்சான் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாடுகள் பகலில் மேய்ந்து விட்டு, மாலை தானாகவே வீடு திரும்பி விடும்.சம்பவத்தன்று, 6 மாடுகள் மட்டும் வீடு திரும்பின. ஒரு மாடு வரவில்லை. அதிர்ச்சியடைந்த அஜீத்குமார், போலீசில் புகார் செய்தார். விசாரித்த செல்வபுரம் போலீசார், விருதுநகர் மாவட்டம் சாத்தனுாரை சேர்ந்த அழகுராஜ், 23, கோவை பனப்பட்டியை சேர்ந்த கிஷோர், 22, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் திருடிச்சென்ற பசு மாடு மீட்கப்பட்டது.மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த, மாடு திருட்டு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்றும், போலீசார் விசாரிக்கின்றனர்.