மாணவர் நலன் காக்க புதிய முன்னெடுப்பு:கல்வித்துறையில் தீவிர முயற்சி
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

வரும் கல்வியாண்டில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்கிறது.

பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு இனி மாதந்தோறும் நிகழும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தச் சந்திப்புகள், மாணவர்கள் மற்றும் பள்ளி மேம்பாட்டுக்கு உதவக்கூடியதாக அமைய வேண்டும் என்றால், இதைக் கடமைக்காக நடத்தாமல், ஆக்கப்பூர்வமாகவும், ஆழமானதாகவும் நடத்த வேண்டும். மாணவர்களின் குறைகள், நேர்மறைத்தன்மைகளைத் தனிப்பட்ட மாணவர்களுக்கென கூறாமல், ஒட்டு மொத்த பகுப்பாய்வாக இருந்தால் நல்லது.பெற்றோரை உதாசீனப்படுத்தும் கல்விக்கூடங்கள், மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. இதை உரக்கச்சொல்வது போல், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு அமையட்டும்.

கலைத்திருவிழா

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தக்கூடியவை, கலைத் திருவிழாக்கள். ஒப்புக்கு இவற்றை மேற்கொள்வதாக அல்லாமல், மாணவர்களை எந்தளவுக்கு தயார்ப்படுத்த முடியுமோ, தயார்ப்படுத்துதல் அவசியம். இதேபோல் விளையாட்டுப்போட்டிகளும் மாணவர்களின் திறமையை எடுத்துக்கூறக்கூடியவை.கலைத்திருவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகளில் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்து, மாணவர்களுக்குத் தனித்திறன் என்ன என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப மாணவர்களை தயாராக்க பெற்றோர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

கல்விச் சுற்றுலா
தனித்திறன் வாய்ந்த மாணவர்களுக்காக கல்விச்சுற்றுலா, உலக, இந்திய, மாநில அளவில் மேற்கொள்ளப்படும். ஒரே இடத்தில் இல்லாமல், பல்வேறு இடங்களையும் மாணவர்கள் சுற்றிப்பார்ப்பதால், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, மொழி நடை உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.மெய் நகர் தளத்திலோ, கற்பனையிலோ உருவகப்படுத்திப் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் உள்ள அனுபவங்கள் வேறுபடும்.


உண்மைத்தன்மை தானே அசலானது!
கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சிகள், இணையப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில ேஹக்கத்தான் போட்டிகள், பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள், சர்வதேச சதுரங்க, ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடல், மண்டல, மாநில அளவில் சாரண, சாரணியர் முகாம்கள் நடத்தப்படும்.அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சிறப்பதாக இவை அமைந்தால் நல்லதுதானே!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X