இன்று இனிதாக...
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா அவிநாசி வட்டாரத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்களில், நடுவச்சேரியிலுள்ள கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு சிறப்பிடம் உண்டு. ஏறத்தாழ, 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில், இக்கோவில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலில், வரும், 25ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.


அதையொட்டி, இன்று காலை, 9:00 மணிக்கு, சாந்தி வேள்வி, முளைப்பாலிகை வழிபாடு மற்றும் புற்று மண் எடுத்தல் ஆகியன நடக்கிறது. பொது திறப்பு விழாமுன்னாள் எம்.எல்.ஏ., தங்கவேல் நினைவகம் திறப்பு, பெரியாயிபாளையம், பழங்கரை ஊராட்சி, அவிநாசி. சிறப்புரை: மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன். மாலை, 5:00 மணி.பட்டமளிப்பு விழாமத்ரஸத்து மிப்தாஹூல் ஜன்னாஹ் அரபிக்கல்லுாரி, அமீன் பள்ளி வளாகம்,திருப்பூர். மாலை, 6:00 மணி.மாநாடுபாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களை முறையாக பயன்படுத்தக்கோரி அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர் தெற்கு ஒன்றியத்தின் 12வது மாநாடு திருப்பூர், மைதிலி சிவராமன் நினைவரங்கில், காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு சிட்கோ பஸ் ஸ்டாப்பில் இருந்து பெண்கள் பங்கேற்கும் பேரணியும் நடக்கிறது.நன்னெறி பயிற்சிபள்ளி மாணவ, மாணவியருக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் நன்னெறி பயிற்சி வகுப்பு, டாப்லைட் அறக்கட்டளை, திருக்குறள் உலகம் கல்விச்சோலை சார்பில் பல்லடம், கரைப்புதுார் அருகே நாச்சிமுத்து நினைவு நுாலகத்தில் நடக்கிறது.

காலை, 10:30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், திருக்குறள் ஆய்வாளர் கணேசன் பயிற்சி அளிக்கிறார்.மருத்துவ முகாம்பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம். இடம்: அரசு மருத்துவமனை, சேவூர் ரோடு, அவிநாசி. காலை, 9:00 மணி. ஏற்பாடு: சி.என்.எஸ்., மருத்துவமனை, அணைப்புதுார்.புத்தக வெளியீடுஓவியர் புகழேந்தி எழுதிய, நான் கண்ட தமிழீழம்' நுால் வெளியீடு, வள்ளலார் நகரில் உள்ள தாய்த்தமிழ் பள்ளி வளாகத்தில் மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இயற்கை வாழ்வகம் முத்துசாமி ஐயா நுாலை வெளியிட உள்ளார். பதியம் இலக்கிய அமைப்பு, நொய்யல் இலக்கிய வட்டம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது.இளைஞர் சந்திப்புஇளைய பாரதம், இளைஞர்கள் சந்திப்பு, மக்கள் சேவை மையம், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,பொது உறுப்பினர் கூட்டம்அ.ம.மு.க., மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம், ரா.ரா.திருமண மண்டபம், போயம்பாளையம் அருகில், திருப்பூர். காலை, 10:00 மணி.கண் சிகிச்சை முகாம்நடமாடும் ஆயுர்வேத கண் சிகிச்சை முகாம், ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் சென்டர், அங்கேரிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். காலை, 9:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் சிகிச்சை மருத்துவமனை.
கொங்கு கலை அரங்கம், திருப்பூர். காலை, 9:00 மணி. ஏற்பாடு: கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, நெருப்பெரிச்சல் துாரன் குல கொங்கு வேளாளர் அறக்கட்டளை.யோகாசன பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்கு நகர், திருப்பூர். மாலை, 5:00 மணி. பெரியார் காலனி மனவளக்கலை மையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். மாலை, 5:00 மணி. விளையாட்டு கூடைப்பந்து போட்டிதிருப்பூர் மாவட்ட கூடைப்பந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணித்தேர்வு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது. திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாலை, 4:00 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் 18 வயது மாணவ, மாணவியர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X