கோவை:மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், கோவை லெஜண்ட் சி.ஏ., அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2021- 22ம் ஆண்டுக்கான, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது.இதில், ரத்தினம் கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணி, கோவை லெஜண்ட் சி.இ., அணிகள் மோதின. முதலில் விளையாடிய ரத்தினம் கல்லுாரி சி.சி., அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 41.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 143 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நல்லதம்பி- 30 ரன் எடுத்தார்.அடுத்து களமிறங்கிய கோவை லெஜண்ட் சி.ஏ., அணி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 39.2 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 144 ரன் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக சதீஷ்குமார்- 51, நவீன்- 42 ரன் எடுத்தனர்.