திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே ஆய்வுக்குழு உறுப்பினர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஊட்டி, மேட்டுப்பாளையம், குன்னுார் ரயில் நிலையங்களை அடுத்து, நேற்று கோவை மாவட்டம், போத்தனுார் மற்றும் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தனர்.கமிட்டி தலைவர் கிருஷ்ணதாஸ் வழிகாட்டுதலின் கீழ், ரவிச்சந்திரன், நிர்மலா கிேஷார், அபிஜத் தாஸ், உமாராணி, கைலாஷ் லட்சுமன் வர்மா, திலீப்குமார் மாலிக் ஆகிய ஆறு பேர் கொண்ட உறுப்பினர்கள், இந்த ஆய்வில் பங்கேற்றனர்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கிளை மேலாளர் இளங்கோவிடம், ஸ்டேஷனில் என்னென்ன வசதிகள் உள்ளது என, கேட்டனர். பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணிகள் தங்கும் விடுதி, கேன்டீன் ஆகியவற்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.