திருப்பூர்:திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு 'ஸ்பிரிங்ஸ் மேட்ரஸ் ' எனும் மெத்தை, தலையணை உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் செயல்படுகிறது.இந்நிறுவனத்தின் 'ஸ்பிரிங்ஸ் எலைட்' என்ற பேக்டரியின் நேரடி விற்பனை ேஷாரூம், கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் செயல்படுகிறது. இதன் ஐந்தாமாண்டு துவக்கம் முன்னிட்டு சிறப்பு விற்பனை மேளா நடைபெறுகிறது.
சிறப்பு விற்பனை குறித்து, அதன் நிர்வாக இயக்குநர் பாலகணேஷ் கூறியதாவது:உலகத்தரம் வாய்ந்த மெத்தை தலையணை உள்ளிட்ட ரகங்களை சொந்தமாக தயாரித்து வழங்குகிறோம். நிறுவனத்தின் நேரடி விற்பனை ேஷாரூம் திருப்பூரில் கஜலட்சுமி தியேட்டர் ரோடு, நெல்லையில் திருச்ெசந்துார் ரோடு மற்றும் சென்னையில் பெருங்குடி ஆகிய இடங்களில் செயல்படுகிறது.
பாக்கெட்டட் ஸ்பிரிங், போனல் ஸ்பிரிங்ஸ், லேட்டக்ஸ், பியு போம், ரப்பரைஸ்ட் காயர், ஆர்தோ சீரிஸ் உள்ளிட்ட தனிச்சிறப்பு தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்ப்பதாக உள்ளது. 5ம் ஆண்டு துவக்கமாக சிறப்பு எக்ஸ்சேஞ்ச் ஆபர் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய மெத்தைகளை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் வரை, புதிய மெத்தைகளுக்கு சலுகை பெறலாம்.குறிப்பிட்ட துாரத்துக்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படும். பஜாஜ் நிறுவனம் மூலம் ஜீரோ சதவீத வட்டியில் எளிய தவணை வசதி உள்ளது. அனைத்து டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் ஏற்று கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.