ஏமாறாதீங்க...பணத்தை இழக்காதீங்க!
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்கத்தான் செய்வர். இணையதள வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில், படிக்காதவர்களைக் காட்டிலும், படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர்.

தொழில்நுட்பம் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர்.குறிப்பாக, சைபர் குற்றங்கள் மூலம் பணம் மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கியூ.ஆர்., கோடு அனுப்புதல், ஓ.டி.பி.,யைக் கூறுமாறு கேட்டல், கே.ஒய்.சி., அப்டேட் என்ற பெயரில் லிங்க் அனுப்புதல் போன்றவை, மோசடிக்கு வித்திடுகின்றன. எதிர்பாராதவகையில், 'லிங்க்'கை திறக்கும் போது, மோசடிக்கும்பல், எளிதாகப் பணத்தைச் சுருட்டி விடுகிறது.குறிப்பாக, அதிகமாக சம்பாதிப்பவர்கள், ஓய்வு பெற்றவர்களைக் குறிவைத்து சைபர் கும்பல் மோசடிகளில் ஈடுபடுகிறது.''பொதுமக்கள் அல்லது நிறுவனத்தினர், வெளிநாட்டினர் போலசமூக வலைதளங்களிலோ அல்லது இ-மெயிலிலோ தொடர்பு கொண்டு பேசுவோரிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.வர்த்தகம் அல்லது திருமணம் குறித்து, உரியவர்கள் மூலம் விசாரித்து அறிய வேண்டும். வெளிநாட்டினர் யாரும் பணம் அனுப்புமாறு கேட்டால், உடனடியாக அவர்களது தொடர்பைத் துண்டிப்பதே சிறந்தது. பணம் அனுப்பக் கூடாது.சிறிய அளவில் பணம் அனுப்பிவிட்டால், அந்தப் பணம் திரும்பிக் கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் அனுப்பக் கூடாது. நீங்கள் அனுப்பும் பணம் எதையும், உங்களுடன் பேசும் நபர்கள் திருப்பித்தரப் போவதில்லை. முன்பின் தெரியாதவர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். இவர்கள் சொல்வதை நம்பி, பணம் அனுப்பக் கூடாது'' என்கின்றனர் போலீசார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X