மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் காயம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
மேற்கூரை பெயர்ந்து விழுந்து சிறுவன் காயம்
Added : மே 22, 2022 | |
Advertisement
 
Latest district News

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 5வது வார்டு கூலிபாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இப்பகுதியில், 2002-03ம் ஆண்டு இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ், 16 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டு, மக்கள் குடியிருந்து வருகின்றனர்.போதிய பராமரிப்பு இல்லாததால், வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு தயாநிதி -என்பவர் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் துாங்கி கொண்டிருந்த அவரின் நான்கு வயது மகன் பரசுராமனுக்கு, தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.வீடுகள் போதிய பராமரிப்பு இல்லாததால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அரசு பராமரிப்பு செய்து தரவேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடிந்த வீட்டை நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன், பார்வையிட்டு வடக்கு தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X