சிறார் ஓட்டிய 66 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் துணை கமிஷனர் பேச்சு
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை, : 18 வயதிற்குட்பட்ட சிறார் ஓட்டிய 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மதுரையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய சிறுவர்கள், அவர்களது பெற்றோர்களுக்கான சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கில் போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி பேசினார்.உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் துணை கமிஷனர் ஆறுமுகசாமி பேசியதாவது: 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி அதன் மூலம் அவர்களது பெற்றோர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்திய தருணத்தில் இக்கருத்தரங்கை நடத்துகிறோம். பெற்றோர்கள் சிறார்கள் வாகனங்களை இயக்கி பிறருக்கு பொருட் சேதமும், உயிர் சேதமும் நிகழ காரணமாக இருப்பதை தடுக்க முன்வர வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது குற்றம். அக்குற்றத்திற்கு துணை போகாமல் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். தற்போது வாகனங்கள் எடை அதிகம் இருப்பதில்லை. இதனால் அதி வேகமாக வாகனத்தை இயக்கும்போது கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நேரிடுகிறது. எல்லா நேரங்களிலும் போக்குவரத்து போலீசார் இதுபோல் அழைத்து அறிவுரை கூற இயலாது. சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்யும்பட்சத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ.25ஆயிரம் வசூலிப்பதுடன், 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X