தினமலர் மாதிரி வினா விடை பயனுள்ளதாக இருந்தது : குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் கருத்து | மதுரை செய்திகள் | Dinamalar
தினமலர் மாதிரி வினா விடை பயனுள்ளதாக இருந்தது : குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் கருத்து
Added : மே 22, 2022 | |
Advertisement
 
Latest district News



மதுரை மாவட்டத்தில் 224 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் 55 ஆயிரத்து 185 பேர் எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்காக தினமலர் தினமும் மாதிரி வினா விடை வெளியிட்டு வருகிறது. 'குரூப் 2 தேர்வுக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பே தினமலர் மாதிரி வினா விடை வெளியிட்டது. இது தேர்வில் கேள்விகள் எப்படி கேட்கப்படும்; எப்படி விடையளிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள உதவியது' என தேர்வு எழுதிய பலர் கூறினர்.மதுரையில் தேர்வில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது:

மெயின் தேர்வுக்கு பயிற்சி
சவுமியா, அய்யர்பங்களா: நான் முதல்முறையாக குரூப் 2 தேர்வு எழுதுகிறேன். இதற்கு முன் குரூப் 4 எழுதியிருக்கிறேன். இன்றைய தேர்வு ஈசியாகதான் இருந்தது. சில மாதங்களாக தேர்வுக்காக தயாராகி வந்ததால் கஷ்டமாக தெரியவில்லை. ஆங்கிலம், கணக்கு ரொம்ப ஈசியாக இருந்தது. முதல்நிலை தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவேன். மெயின் தேர்வுக்கு இனி பயிற்சி செய்ய வேண்டும்.

பட்ஜெட் குறித்து கேள்விகள்
விசாகநந்தினி, உத்தங்குடி: குரூப் 2க்கான பாடத்திட்டத்தை நன்றாக படித்தாலே போதும் எளிதாக மார்க் எடுத்துவிடலாம். எல்லா பாடமும் சிரமம் இல்லாமல் இருந்தது. நான் ஆங்கிலம் எடுத்திருந்தேன். எளிதாக இருந்தது. கணிதத்தில் இருந்து கேட்கப்பட்டவை எளிதில் விடையளிக்ககூடியதாக இருந்தது. ஏற்கனவே யு.பி.எஸ்.சி. தேர்விற்காக தயாராகி வருகிறேன். இந்த தேர்வுகளையும் எழுதினால் அடுத்து எழுதக்கூடிய தேர்வுகளுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதால் எழுதினேன். தமிழக பட்ஜெட் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

குரூப் 4 தேர்வு அனுபவம்
ரோகிணி, திண்டுக்கல்: இரண்டு மாதங்களாக முயற்சித்து படித்தேன். குரூப் 4 தேர்வு எழுதியிருக்கிறேன். அந்த அனுபவத்துடன் என்னை தயார் செய்து எழுதியிருக்கிறேன். ரிசல்ட் நல்லபடியாக வரும் என எதிர்பார்க்கிறேன்.சூர்யா, தபால்தந்தி நகர்: முதன்முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறேன். அன்றாட நிகழ்வுகள் குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்படவில்லை. ஆங்கிலம், கணக்கிலிருந்து கேட்கப்பட்டவை எளிதாக இருந்தது. 3 மாதங்களாக பயிற்சி எடுத்தேன். இதில் வென்று மெயின் தேர்விற்கு தேர்வாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு தெரிவித்தனர்.மதுரை, மே 22-

'டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மிக எளிமையாக இருந்தது; தினமலர் வெளியிட்ட மாதிரி வினா விடை பயனுள்ளதாக இருந்தது' என மதுரையில் நேற்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X