ஏ.டி.எம்.,மில் ரூ.500தான் கிடைக்குது : ரூ.100, 200க்கு தட்டுப்பாடு | மதுரை செய்திகள் | Dinamalar
ஏ.டி.எம்.,மில் ரூ.500தான் கிடைக்குது : ரூ.100, 200க்கு தட்டுப்பாடு
Added : மே 22, 2022 | |
Advertisement
 


மதுரை, : மதுரையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் ரூ.100, 200 நோட்டுக்கு தட்டுப்பாடு உள்ளதால் ரூ.500க்கு குறைவாக பணம் எடுக்கமுடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.சாமானியர்கள் தங்களது தேவைக்காக ரூ.100, 200க்காககூட ஏ.டி.எம்., மையத்திற்கு செல்கின்றனர். பணம் எடுக்க முயலும்போது 'ரூ.500 மற்றும் அதன் மடங்குகளாக மட்டுமே பணம் கிடைக்கும்' என மானிட்டரில் அறிவிப்பு வெளியாகிறது. பெரும்பாலான மையங்களில் ரூ.2000 நோட்டு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ரூ.100, 200ம் நிறுத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.முன்னோடி வங்கி அதிகாரி அனிலிடம் கேட்டபோது,''ரூ.2000 நோட்டை வெளியில் மக்கள் மாற்றுவது சிரமமாக இருப்பதால் நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் பணம் செலுத்தும், பணம் எடுக்கும் வசதியுள்ள 'கேஷ் ரீ சைக்ளிங்' ஏ.டி.எம்.மில் யாராவது ரூ.2000 நோட்டு செலுத்தியிருந்தால் அதிலிருந்து வேறு யாராவது பணம் எடுக்கும் போது ரூ.2000 கிடைக்கலாம். மற்றபடி அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூ.100, 200 நோட்டுகள் இருக்க வேண்டுமென உத்தரவு உள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும்'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X