திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி சார்பில், 2008 - 09ல், நுாலக கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த நுாலகத்தில், அரசு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தினசரி நாளிதழ்களும் இருந்ததால், மக்கள் அதிகளவில் வந்து படித்து வந்தனர்.இந்நிலையில், சில ஆண்டுகளாக நுாலகம் திறக்கப்படாமல் பூட்டியே இருக்கிறது. இதனால் நுாலகம் சுற்றியும் செடிகள் வளர்ந்தும் பராமரிப்பின்றி உள்ளது. எனவே, நுாலகம் தினசரி திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும்.