கோவை:தென்மேற்கு பருவமழை காலத்தில், தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் சராசரி மழையளவை விட அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழைஜூன் துவங்கி செப்., மாதம் வரை இருக்கும். இக்காலத்தில், தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும். நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை காலத்துக்கான மழை குறித்த முன்னறிவிப்பு வெளியிட,வேளாண் பல்கலையின்காலநிலை ஆராய்ச்சி மையத்தின் பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த தகவல்களை ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் மென்பொருள் கொண்டு, தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்புபெறப்பட்டது. ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.இதன்படி, தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களில், 60 சதவீதம் மழை பெற வாய்ப்பு உள்ளது. மேலும், வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சராசரி மழையளவை விட அதிகமாக மழை எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில், சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, தேனி,திண்டுக்கல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சராசரி மழையளவை விட அதிகமாக மழை எதிர்பார்க்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.