பஞ்சு, நூல் விலை சீராகும் வரை 'ஸ்டிரைக்';நூற்பாலை உரிமையாளர்கள் அதிரடி முடிவு
Added : மே 22, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை:பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை நுாற்பாலைகளை இயக்குவதில்லை என்ற அதிரடி முடிவை தென்னிந்திய நுாற்பாலை உரிமையாளர்கள் எடுத்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறுநுாற்பாலைகள் சந்தித்து வருகின்றன. கடந்த ஜன., மாதம், 356 கிலோ உடைய ஒரு கேண்டி பஞ்சு விலை, 75 ஆயிரம் ரூபாயாக இருந்தது; தற்போது, 1.15 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், கிலோ, 328 ரூபாயாக இருந்த நுாலின் விலை தற்போது 399 ஆக அதிகரித்துள்ளது.


அபரிமித பஞ்சு விலை உயர்வுக்கு நம் நாட்டில் குறைந்த பருத்தி விளைச்சலே காரணம். பருத்தி சீசன் துவங்கியதும், பெரிய பஞ்சு வியாபாரிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உடன்பாடு எட்டப்பட்டு, அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து வியாபாரிகள் இருப்பு வைத்துக்கொண்டனர்.மேலும், அதிக அளவு பஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், பஞ்சு விலை கடுமையாக உயர்ந்தது. தமிழகத்திலுள்ள நுாற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்வதில் மூலதன பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக புலம்பும் நுாற்பாலை உரிமையாளர்கள், நுாற்பாலைகளை இயக்க முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.இந்நிலையில், கோவையிலுள்ள தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை, சங்கத் தலைவர் செல்வன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை நுாற்பாலைகளை இயக்குவதில்லை என முடிவு செய்தனர்.சங்கத்தலைவர் செல்வன் கூறியதாவது:பஞ்சு விலை ஒரு கேண்டி, 1.15 லட்சம் ரூபாயுக்கு விற்பனையாகிறது.
நிைலமை கை மீறி போய்விட்டது. இச்சூழலில் பஞ்சை கொள்முதல் செய்து நாங்கள் நுாலை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. மிகவும் சிரமம் என்பதால்தான், பஞ்சு மற்றும் நுால் விலை சீராகும் வரை இன்று (நேற்று) முதல் நுாற்பாலைகளை இயக்குவதில்லை என்றும், பஞ்சு கொள்முதல் செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளோம். இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும். இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். வருவாய் இழப்புடன், அன்னியசெலாவணியிலும் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



இன்று முதல் 'ஸ்டிரைக்'

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நுால் கொடுத்து, அதை துணியாக மாற்றி விற்பனை செய்துவருகின்றனர். நுால் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்த விசைத்தறியாளர்கள் இன்று முதல் ஜூன், 5-ம் தேதி வரை, 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய்க்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும்.




 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X