திருச்செங்கோடு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால், 7,009 ரூபாய் முதல், 8,789 ரூபாய் வரையிலும், கிழங்கு ரகம் மஞ்சள், 6,699 ரூபாய் முதல், 7,339 ரூபாய் வரையிலும், பனங்காளி ரகம், 10 ஆயிரத்து 125 ரூபாய் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரையிலும் என, மொத்தம், 2,200 மஞ்சள் மூட்டைகள், ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.