சேலம், சேலத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வை, 55 ஆயிரத்து, 28 பேர்
எழுதினர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - '2, 2ஏ' தேர்வு, சேலம் மாவட்டத்தில், 161 மையங்களில் நேற்று நடத்தப்பட்டது. அதில், 63 ஆயிரத்து, 437 பேர் எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். காலை, 9:30 முதல், 12:30 மணி வரை நடந்த தேர்வை கண்காணிக்க, 12 பறக்கும் படை, 55 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இத்தேர்வை, 55 ஆயிரத்து, 28 பேர் எழுதினர். 8,409 பேர் வரவில்லை. இது, 13 சதவீதம்.
சேலம் அரசு கலைக்கல்லுாரி, மரவனேரி பாலபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் ஆய்வு செய்த பின், கலெக்டர் கார்மேகம் கூறுகையில், ''அனைத்து மையங்களும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட தேர்வர் எழுதக்
கூடிய, 9 மையங்கள், கூர்நோக்கு மையங்களாக கருதப்பட்டு, கூடுதல் கேமரா பதிவு செய்யப்படுகிறது,'' என்றார்.