சேலம், தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின், டெல்டா பாசன விவசாயத்துக்கு, மேட்டூர் அணையில் பாசன நீர் திறந்து வைக்க வர உள்ளார். மே, 23(நாளை) மதியம், 3:00 மணிக்கு, தனி விமானத்தில், சென்னையில் இருந்து சேலம் விமான நிலையம் வருவார். அங்கிருந்து தீவட்டிப்பட்டி, தொப்பூர், மேச்சேரி வழியாக மேட்டூர் வந்து, இரவு ஓய்வு எடுக்கிறார். 24 காலை, 9:00 மணிக்கு, மேட்டூர் அணை நீரை திறந்து வைக்க உள்ளார். அன்று மதியம், 2:00 மணிக்கு, ஆத்துார், செல்லியம்
பாளையத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு தலைமையில் நடக்க உள்ள, தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், முதல்வர் பேச உள்ளார்.
அதனால், 23 மதியம், 3:00 மணிக்கு, தீவட்டிப்பட்டியில் மத்திய மாவட்டம் சார்பிலும், மாலை, ௪:00 மணிக்கு, மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் மேற்கு மாவட்டம் சார்பிலும், முதல்வருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும், செல்லியம்பாளையத்தில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்திலும், கட்சியினர், மக்கள் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, மாவட்ட நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து செயலர்கள், அனைத்து அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.