ஓசூரில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் அரசு கல்லுாரி வளாகத்தை, மாவட்ட கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஓசூர் மிடிகிரிப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் தேர்வாகும் இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, உதயநிதி எம்.எல்.ஏ., வழங்குகிறார். முகாம் நடக்கும் கல்லுாரி வளாகத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு குறித்து, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஓசூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, முகாமிற்கு வரும் இளைஞர்களுக்கு செய்யப்பட்டுள்ள உணவு, தண்ணீர், பஸ் வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதி குறித்து விவாதிக்கப்பட்டது. ஆய்வின் போது, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
துண்டு பிரசுரம் வழங்கல்
வேலை வாய்ப்பு முகாம் துண்டு பிரசுரம் நேற்று மத்தூர் பி.டி.ஓ., முருகன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையங்கள் முன் வழங்கினார். துணை பி.டி.ஓ., சாந்தகுமாரி மற்றும் பஞ்., செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.