சென்னிமலை, சென்னிமலை, திருமுகம் மலர்ந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 51; ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையானவர். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனாலும், மது குடிப்பதை நிறுத்தாததால் குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் தண்ணீர்பந்தல், அம்மன் நகர் பகுதியில் ஒரு வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.