விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லுாரியில், 11வது கணித இணைப்புக் கூட்டம் நடந்தது.
முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். வேலுார், வி.ஐ.டி., உதவி பேராசிரியர் ராஜசேகரன் 'நேரியல் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முன்னதாக, மாணவர்கள் செய்த கணித செயல்முறை மாதிரிகளின் விளக்கங்களை முதல்வர், துணை முதல்வர், உதவி பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கேட்டறிந்தனர்.
பின், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கணிதத்துறை உதவி பேராசிரியர் யாகசித்ராதேவி தொகுத்து வழங்கினார்.பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.