விக்கிரவாண்டி:விக்கிரவாண்டியில் பேரூராட்சி, மேல்மருவத்துார் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லுாரி சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணா துரை, துணைச் சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். புகழேந்தி எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார். மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் , தி.மு.க., நகர செயலாளர் நைனா முகமது, மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், இளைஞரணி பிரசாத், சிவா, அசோக், பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகா சக்திவேல், ஆனந்தி, சுரேஷ், சுதா பாக்கியராஜ், பிரியா பூபாலன், வீரவேல், ரமேஷ், சுபாசிவஞானம், வெண்ணிலா காத்தவராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.