சேலம், சேலத்தில், 'காலைக்கதிர்' நடத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சி, வரும், 28, 29ல் நடக்க உள்ளது. எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்கவும், அதில் உள்ள சந்தேகம், குழப்பங்களை தீர்த்துக்கொள்ளவும் வழிகாட்டப்பட உள்ளதால், பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்று, பயன்பெற்று, வாழ்வை வசந்தமாக்கிக் கொள்ள, 'காலைக்கதிர்' நாளிதழ் அன்போடு
அழைக்கிறது.
உலகம் முழுதும் இரு ஆண்டாக, நம்மை வீடுகளுக்குள் முடக்கிப்போட்ட கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்கால திட்டமிடல், கனவுகள் நொறுங்கிப்போயின. மீண்டும் இயல்பு நிலை திரும்புவதால், தமிழகத்தில், இரு ஆண்டுக்கு பின் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதனால், முதல்முறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மதிப்பெண் மட்டுமின்றி, பெறும் மதிப்பெண்களுக்கு எந்த கல்லுாரியில் சீட் கிடைக்கும்; எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம் என்பன உள்ளிட்ட ஏராளமான கேள்விகள், சந்தேகம், குழப்பம், பதற்றங்கள் உருவாக தொடங்கியிருக்கும்.
எப்போதும் மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள, 'காலைக்கதிர்' நாளிதழ், உங்கள் எதிர்காலத்துக்கு சரியான வழிகாட்ட, 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
நடப்பாண்டு, கோவை, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 'காலைக்கதிர்' நடத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சி, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில், வரும், 28, 29ல் நடக்க உள்ளது. கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
இரு நாளும் காலை, 10:00 முதல், மாலை, 6:30 மணி வரை, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்கள், வல்லுனர்கள், துறைசார்ந்த சந்தேகங்களுக்கு கருத்தரங்கில் விளக்கம் அளிக்க உள்ளனர்.
வேலைவாய்ப்பை அள்ளித்தரும் துறைகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? நீட், ஜே.இ.இ., தேர்வில் சாதிக்க, 'டிப்ஸ்' தேவையா? கலை, அறிவியல், சட்டம், மருத்துவம், துணை மருத்துவம், டிசைன், ஆர்க்கிடெக்சர் படிப்புகளின் எதிர்காலம் என்ன? கணினி அறிவியல், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் எப்படி என்பன உள்ளிட்ட அனைத்து வினாக்களுக்கும், இந்த இரு நாள் கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்படும்.
மேலும், கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மாணவ, மாணவியருக்கு, 'டேப், வாட்ச்' பரிசாக வழங்கப்பட உள்ளன. சிறப்பு பரிசாக, மடிக்கணினியும் உண்டு. இதுதவிர, 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள், 'ஸ்டால்'கள் அமைத்து, உங்களுக்கான விண்ணப்பம் முதல், சேர்க்கை வரை உதவ தயாராக உள்ளனர். அதனால், நீங்கள் எடுக்கும் தெளிவான, சரியான முடிவு, உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும். அதற்கு, 'காலைக்கதிர்' வழிகாட்டும் என்பதால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயன்பெற, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை அழைக்கிறோம்.
அனுமதி இலவசம் என்பதால், பெற்றோரும், தங்கள் மகன், மகள்களை அழைத்து வந்து, அவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்ட, 'காலைக்கதிர்' நாளிதழுடன் இணைந்து பங்குபெறுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.