பாலக்காடு : காரில் கடத்தப்பட இருந்த, 65 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்த அப்துல் கரீம் 49, வயநாடு மாவட்டம் கல்பறாவை சேர்ந்த முகமது பாசில் 36, ஆகியோரை கைது செய்தனர். அப்துல் கரீம் மீது, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏழு வழக்குகளும், பாசில் மீது ஒரு வழக்கும் உள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.